பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 93

குறையாமல் கொடுத்துதவும் கல்விக் காகக்
    கோவில்களை உருவாக்கும் அரசர் தம்மை,

வரையாமல் வழங்கியருள் வள்ளல் தம்மை
    வளர்த்துவிட்ட தெந்நாடு? சிற்பப் பாங்கு

மறையாமல் காட்டிவரும் கோவில் கட்டி
    மாண்புகொண்ட தெந்நாடு? செட்டி நாடே(3)

வாழ்க! வாழ்க!

இந்நாட்டுப் பழம்பதியாம் இவ்வூர் தன்னில்
    எத்துணையோ அறமென்றும் திருநாள் என்றும்

பொன்போட்டுச் செய்துவரல் கண்டோம்; இன்று
    புலவனுக்குத் தமிழ்மொழிக்கு மக்கள் வாழ

அன்பூட்டி அறமுரைத்த திருக்கு றட்கும்
    ஆர்வத்தால் ஒருமித்துத் திருநாள் கண்டீர்!

என்பாட்டுத் திறத்தாலே வாழ்த்து கின்றேன்
    இமைபோலக் குறள்நெறியைக் காப்பீர்! வாழ்வீர்!(4)

மயிலும் வள்ளுவரும்

மலர்விரிந்த குளிர்தென்றற் சோலை தன்னுள்
    மயிலொன்று தோகைவிரித் தாடக் கண்டேன்;

சிலர்வந்தார் எனைச்சூழ்ந்து; மயிலைக் கண்டு
    சிந்தைதனைப் பறிகொடுத்தார் புகழக் கேட்டேன்;

குலவியநல் தோகைஎழில் ஒருவர் சொன்னார்,
    கொண்டைஎழில் மிகநன்றென் றொருவர் சொன்னார்,

நலமிகுந்த வண்ணங்கள் ஒருவர் சொன்னார்,
    நடனந்தான் அருமைஎன மற்றோர் சொன்னார்,(5)

அரிவையரைத் தோற்கடித்த சாயல் கண்டோர்
    அடடாஎன் றதைப்புகழ்ந்தார், நீள்க ழுத்தை