94 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
மருவுமெழிற் சிறுவிழியைப் புகழ்ந்தார் பல்லோர் வாய்மொழிந்த அத்தனையும் உண்மை! உண்மை! அறிஞனெனக் கவிஞனெனச் சமயப் பாங்கின் அறிவனெனச் சீர்திருத்த வாதி என்ன அரியதொரு பொருளியலில் மருத்து வத்தில் அகத்துறையிற் கைவந்த வல்லான் என்ன(6) வள்ளுவனைப் பாடவந்த கவிஞர் கூறும் வாய்மொழிகள் வாய்மொழியே; ஐயம் இல்லை; புள்ளிமயில் எழில்கொண்டார் வியந்து ரைத்த புகழ்மொழிகள் அத்துணையும் அதனைச் சாரும்; வள்ளுவற்கும் அப்படியே; துறைகள் தோறும் வகைவகையா வாகைபெறப் பாடி வைத்த தெள்ளுதமிழ் வல்லானை எந்த வண்ணம் தேர்ந்தெடுத்துப் புகழ்ந்தாலும் முற்றும் சாலும்(7) வானத்தை முழம் போடல் அணுவெடுத்துத் துளையிட்டுக் கடல்கள் ஏழும் அதனுள்ளே புகவிட்ட செய்கை போல மணிநிகர்த்த குறட்பாவில் உலக மெல்லாம் மடுத்துவைத்த வள்ளுவன்றன் ஆற்றல் தன்னைத் துணிந்தெடுத்து முழுதுரைக்க வல்லே மோநாம்? துளிதுளியா ஒருசிறிதே காணல் கூடும்; மணிநிறத்து வானத்தை நமது கையால் முழம்போட்டு மதிப்பிடுதல் முடிவ தொன்றோ?(8) நமது கடன் மக்களினம் இவ்வுலகில் இனிது வாழ வாழ்நெறிகள் கூறுமொரு நூல்தான் யாது? |