96 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்; கடுகிவரும் பகையுளதேல் எதிர்ப்போம் மாய்ப்போம்; தனியான நிலையொழித்து வருவோம் சேர்வோம்; தமிழ்நாடு நமதாக முயல்வோம் வெல்வோம்; குனியாத மனனோடு வளர்வோம் வாழ்வோம்; குகைவாயில் அரிபோல எழுவோம் நாமே.(12) தேவகோட்டைத் திருவள்ளுவர் விழாக் கவியரங்கில் தலைமை ஏற்றுப் பாடிய பாடல் நாள்:10-5-1959 |