பக்கம் எண் :

10கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நாளைய நாடுன தாட்சியிலே- என
      நாடி நடந்திடு மாட்சியிலே
காளையே தீமையைக் காய்ந்துவிடு-பல
      கற்றவர் நூல்களை ஆய்ந்துபடி
தோளினைப் பாரினில் தூக்கிநட-வரும்
      தோழனே கீழ்மையைத் தாக்கிவிடப்
பாளைச் சிரிப்பினைக் காட்டிடுவாய்-அதிற்
      பண்புகள் யாவையும் ஊட்டிடுவாய்

தீய குணங்களைத் தூக்கிஎறி- அது
      தெள்ளிய நாட்டினைக் காக்கும் நெறி
தூய மனத்தினைப் போற்றிநட-பொதுச்
      சொத்தினைக் கண்ணெனக் காத்துநட
சேயுன தன்னையின் நாடுயர-மனச்
      செம்மையைக் காத்திடப் பாடுபடு
தாயக மேன்மையை ஆக்கிவிடு-வளர்
      தம்பிஎன் வேதனை நீக்கிவிடு