104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
துணிவுடன் என்னுள் தோன்றுநல் லார்வமும் முப்புரித் திரியென மொய்ம்புடன் ஏற்றி எப்பொழு தும்நினை ஏத்துதல் உடையேன்; உணர்வெனும் நெய்யில் ஊறிய யாப்பில் புணரணி ஏற்றிப் பொருள்தெரி வகையால் உலகம் அனைத்துநின் ஒளியினைப் பரப்பக் குலவும் நினைவே கொண்டுளேன் அதனால் செய்யும் பணிகள் செல்விதன் இலங்கிடக் கைகுவித் தேத்தினேன் காத்தருள் தாயே! |