பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

3
அந்தோ அரசியலே!

எண்சீர் விருத்தம்

ஓலிபெருக்கி முழங்கிற்றுச் சற்று நின்றேன்;
      உணர்ச்சிமிக்க பேச்சாளர் தமது நெஞ்சில்
வலிவிருக்கும் வரைகத்திப் பழித்துக் கூறி
      வாய்க்குவந்த படியெல்லாம் பொழிந்தார் மாரி;
அலிஎனத்தன் நிலைமறந்து மாறி மாறி
      அரசியலை விளையாட்டுக் களமாக் கொண்டார்;
பலிகொடுக்க ஏமாளிக் கூட்ட முண்டு
      பாவையென ஆட்டுகிறார் பகட்டுக் காரர்.

காலையிலே ஒன்றுரைப்பார் மாலை வந்தால்
      கட்சியினைக் கொள்கையினை மாற்றி நிற்பார்;
ஓலையிலே விழுந்தபுனல் போல அங்கும்
      ஒட்டாமல் ஓடிடுவார்; விடிந்த பின்னர்
காலையிலே சொன்னதுதான் உண்மை என்பார்;
      காசுக்குப் பாய்விரிக்கும் பெண்டிர் ஆனார்;
நூலறியார், அரசியலிற் கேடு செய்ய
      *நோய்நுண்மம் படர்ந்ததுபோல் படர்ந்து விட்டார்.

அறமுரைக்கும் பெருநூல்கள் நமது நாட்டில்
      ஆயிரங்கள் உண்டென்பர்; ஆனால் அந்த
அறமனைத்தும் நூல்களுக்குள் அடக்க மன்றி
      ஆறறிவு படைத்தவர்பால் அரும்ப வில்லை;


*நோய்நுண்மம் - நோய்க்கிருமி