120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
மூட்டிவிட்ட சினத்தீயில் யாகி யாகான் முகம்பொசுங்கி அகம்நசுங்கி இருளில் வீழ்ந்தான் பூட்டுடைத்து வெளிவந்தார் வங்க மாந்தர்; பூத்துவிட்டான் புதுக்கதிரோன் கிழக்கு வானில்; *கேட்டுமனங் கொண்டிருக்கும் பூட்டோ மட்டும் கிலிபிடித்துத் தோல்வியினால் புலம்பு கின்றான்; நாட்டவரை ஏமாற்ற உளறு கின்றான்; நல்லறிவு பெற்றதுபோல் தோன்ற வில்லை. புலம்பட்டும் நமக்கென்ன? புத்தி கெட்டுப் போர்முறையே விருப்பமெனில் வந்த பின்னர்க் கலங்கட்டும் தனித்திருந்தே; அமைதி ஒன்றே காலமெலாம் விரும்புகிறோம்; அதைக்கெ டுத்துப் புலங்கெட்ட பூட்டோவும் போர்தொ டுத்தால் பொன்றட்டும் நமக்கென்ன? நமது நாட்டில் சிலம்பட்டும் போர்முரசு! மக்கள் வெள்ளம் திரளட்டும் ஒருமுகமாய்! ஒருகை பார்ப்போம்.
* கேட்டுமனம் - கெடுதலையுடைய மனம் |