பக்கம் எண் :

122கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

கோட்டமில் மனத்தாற் சொல்வேன்
      கூறிய இரண்டும் வேண்டும்;
கேட்டினை நாமே செய்தால்
      கிளர்ச்சியாற் பயனே இல்லை;

இருள்மிகு நமது வீட்டில்
      எழில்ஒளி புகுவ தற்குப்
பொருள்வரு வழியை மூடிப்
      போடுதல் முறையோ? சொல்வீர்!
மருளுற நாட்டு மக்கள்
      மயக்குறச் செய்த பின்னர்
வரும்நம துரிமை என்றால்
      வாழ்வென ஒன்று வேண்டா.

நம்முடை வறுமை நீக்க
      நாட்டினை வறுமை செய்தால்
அம்முறை சரிஎன் றோதார்
      ஆதலின் தோழர் தம்மை
வம்மென அழைப்போம் கூடி
      வந்தபின் உழைப்போம் ஒன்றாய்;
நம்முயர் நாடுங் காப்போம்
      நலமுற வீடுங் காப்போம்.