124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
11 தீண்டாமை (கலிவெண்பா) நெஞ்சத்தால் தூயனவன் நேர்மை பிழைத்தறியான் வஞ்சத்தை ஓர்நாளும் வாழ்வதனிற் கண்டதில்லை; ஆண்டான் திருவடிக்கே ஆளடிமை செய்துவந்தான் ஆண்டவன் கோவிலுக் காகும் பொருளெல்லாம் கொட்டிக் குவித்திருந்தான் கூலிஎன வேலைசெய்து கொட்டிக் குவித்தான் குலமாண்ட வேதியற்கு; தன்னலமே கண்டதில்லை; *தாண்டவமே கண்டதில்லை முன்னமவன் கண்டதில்லை; முத்திதரும் தில்லைஎனக் கண்டவர்கள் சொன்னதுண்டு கண்டுவரும் ஆர்வமிகக் கொண்டெழுந்தான் அன்புளத்துத் தொண்டனவன் ஆதனூர் வந்துதித்த நந்தனவன்; வந்தவனை அந்தணர்கள் செந்தழழிற் போட்டுச் சிவபெருமான் பேர்சொல்லிச் செம்மைப் படுத்திவிட்டார்; செம்மல் கருமேனி வெம்மைச் சுடுதழலால் வேதித்தார் வேதியர்கள்; உள்ளத்தாற் சொல்லால் உடலால் எனுமூன்றால் எள்ளத் தனைபிறழா தென்றும் இருப்பானை ஓங்கும் ஒழுக்கத் துயர்ந்தானை எவ்வெவர்க்கும் தீங்கு நினையானைச் சேரிவாழ் நந்தனைப் பொன்னம் பலத்துட் புகுந்து வழிபடத்தான் முன்னம் தடுத்தார்கள் முப்புரியார்; முப்புரத்தைச்
* தாண்டவமே கண்டதில்லை - நடனமே கண்ட தில்லைப்பதி |