பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்131

15
நல்ல உலகமடா!

கலி வெண்பா

விண்ணைத் தொடநிமிர்ந்த விந்தைப் பெருமலைஎன்
கண்ணிற் புகுந்து கருத்தில் இடம்பெறவே
வண்ண எழிலெல்லாம் வாரிப் பருகமனம்
எண்ணியதால் ஆங்கோர் எழில்முகிலா மாறிமிக
ஓங்கும் மலைமுகட்டின் உச்சிப் பெருவெளியில்
தேங்கித் தவழ்ந்து திரிந்துவிளை யாடிவந்தேன்;
பூத்துக் குலுங்கும் பொலிவுடைய மாஞ்சோலை
பார்த்துக் களித்தங்குப் பாடுங் குயிலானேன்
கேளென்று வந்த கிளைக்குயிலைக் கூடிநின்று
நாளெல்லாம் நல்ல தமிழ்பாடிக் கொண்டிருந்தேன்;
முற்றி முதிர்கனிகள் மொய்த்திருக்கக் கண்டதனால்
பற்றி அவையுண்ணப் பாய்ந்துவரும் சிற்றணிலா
மாறிக் கிளைதோறும் மாங்கனிகள் துய்ப்பதற்
கேறிக் குதித்தங்கே எக்களித்து நான்திரிந்தேன்;
நாற்றைச் செழிப்பாக்கி நாட்டைச் சிறப்பாக்க
ஆற்றிற் சலசலவென் றார்த்துப் புனலோடக்
கண்டேன் குதித்தேன் கயலாகிப் பாய்ந்தின்பம்
கொண்டேன் அதனுட் குளித்தெழுந்து துள்ளிக்
குதித்து நெளிந்தோடிக் கொத்தடிமை யின்றி,