பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்133

16
சிவப்பு விளக்கு

ஒன்றிரண்டு பெற்றிருந்தால் மகிழ்ச்சி பொங்கும்
      உள்ளமெலாம் அன்பூறும்; கண்ணே முத்தே
என்றிருந்து கொஞ்சிமகிழ்ந் தின்பங் காண்போம்;
      எட்டென்றும் பத்தென்றும் பெருக்கி விட்டால்
கன்றிமனம் நோவதலால் இன்பம் ஏது?
      கனிவேது? குலவிவரும் அன்பும் ஏது?
முன்றில்தனில் வரும்போதே எரிந்து வீழ்வோம்,
      முப்பொழுதுங் கடுகடுப்பே முகத்தில் வாழும்.

தந்தைக்கும் நலனில்லை; சுமந்து பெற்ற
      தாய்தனக்கும் நலனில்லை; பெருகு மக்கள்
மந்தைக்கும் நலனில்லை; வீடும் நாடும்
      வளஞ்சிறக்க வழியில்லை; இவற்றை எல்லாம்
சிந்திக்கும் மனமில்லை; சொன்னால் கேட்கும்
      செவியில்லை; இவ்வாறே நடந்தால் நம்மை
நிந்திக்கும் வருங்காலம்; இல்லை என்ற
      நெடுஞ்சொல்லே எத்திக்கும் நிறைந்தி ருக்கும்;

முக்கோண வடிவத்தைக் காணும் போது
      முகங்கோணுஞ் சிலருக்கு; நாட்டு மக்கள்
எக்கேடு கெட்டாலும் தம்மி னத்தார்
      இனிதாக வாழ்வதுதான்அவர்தங் கொள்கை;