பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்137

சிந்தனையே இல்லாமல் எட்டும் பத்தும்
      சீரழிய மகப்பெறுதல் வீட்டிற் குள்ளே
வந்துபுகும் வறுமைக்கோர் அறிவிப் பாகும்;
      வளமிழந்து நலமிழந்து நாடு தானே
நொந்தழியுஞ் சிறுமைக்கோர் அறிவிப் பாகும்;
      நுண்மதியர் ஈதுணர்ந்தே வீடும் நாளும்
வெந்துயரில் வீழாமற் காப்ப தற்கு
      விளக்குகின்றார் முக்கோணச் சின்னங் காட்டி.

என்றுரைத்தேன் மொழிந்தவெலாங் கேட்ட நல்லாள்
      ‘எழில்கொழிக்கும் நமதில்லம்; நலங்கள் பெற்று
நின்றினிக்கும் நம்நாடு; நெஞ்சில் என்றும்
      நிலைத்திருக்கும் இவ்வெண்ணம்; அதனால் நீங்கள்
நன்றுரைக்கும் படிநடப்பேன்; கட்டுப் பாட்டு
      நலங்காக்கும் பொறுப்புமக்கும் வேண்டு மத்தான்!
என்றனுக்கு மட்டுமிது கடனாம் என்றே
      ஏமாந்து போகாதீர்’ என்று ரைத்தாள்.