14 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
மறைப்பிடமே இல்லாமல் சதையைக் காட்டி மதர்ப்புடனே நடிக்கின்ற மங்கை நல்லார் கறைப்படுமே பண்பாடென் றெண்ணா ராகிக் கன்னத்தை வாடகைக்கு விட்டால், மீண்டும் தரப்படுமே நடிப்பதற்கு வாய்ப்பென் றெண்ணித் தரங்கெட்ட காட்சிகளில் நடித்துக் காட்டும் திரைப்படங்கள் வளர்வதற்கிங் கிடங்கொடுத்தால் தெருப்புழுதி போலாகும் மக்கள் நெஞ்சம் கற்பழிப்பு, களவாடல், கடத்தல் என்ற கயமைஎலாம் கற்பிக்கும் கதைகள், கெட்ட சொற்பெருக்கம் கொண்டொழுகும் காமப் பாட்டு, துள்ளிவரும் நடனமெனப் பேயின் ஆட்டம், மற்போர்கள் செய்வதுபோல் காதற் காட்சி, மாமேதை இயக்குநர்கள் திறமை,எல்லாம் கற்போர்கள் நெஞ்சத்தைக் கெடுப்ப தல்லால் கடுகளவு நலமேனும் தருவ துண்டோ? எதைக்கண்டு துடிப்பதடா? அந்தோ இங்கே எதைக்கண்டு கொதிப்பதடா? தமிழர் நாட்டில் பதைக்கின்ற நிலையல்லால் அமைதி யில்லை; பைந்தமிழின் நிலைகாணின் நெஞ்சே வேகும்; மிதிக்கின்ற வழிதேடி வடபு லத்தார் மெல்லமெலப் புகுகின்றார்; இந்தி கொண்டு வதைக்கின்ற வழியமைத்து வருதல் கண்டேன் வடவர்பிடி எத்தனைநாள்? எனத்துடித்தேன் இல்லத்தார் துடிதுடிக்க, மாலையிட்ட இல்லாளும் துடிதுடிக்கப் பெற்ற பிள்ளை சொல்லத்தான் முடியாமல் துடிது டிக்கச் சூழ்ந்தஉயிர் அணுவெல்லாம் துடிது டிக்க |