19 துன்புறவோ பெற்றாள்? இன்பத்தை வாழ்வதனில் விழையும் மாந்தர் இருக்கும்நிலை யுணர்ந்துமகப் பெறுதல் வேண்டும் பன்மக்கள் பெறலொன்றே கடனென் றெண்ணிப் பலபெறலால் அவர்பொறுப்புத் தீர்வ தில்லை; துன்பத்தை அவர்காண்ப தன்றி நாட்டின் துயருக்கு விதைதூவி விட்டோர் ஆவார்; நன்மக்கள் எனநாடு போற்றும் வண்ணம் நலிவகற்றி வளர்ப்பதவர் கடமை யன்றோ? வீட்டுநிலை நாட்டுநிலை அறியா மாந்தர் வெறும்பருவ நலமொன்றே குறியாக் கொண்டு கூட்டுணர்வால் ஆண்டுதொறும் தவறா வண்ணம் குழந்தைகளைப் பெற்றுவிட்டு, வளரும் நாளில் வாட்டுகிற பிணிநீக்கி உண்டி தந்து வளர்கல்வி யறிவூட்டிப் பேணிக் காக்க மாட்டாமல் துயர்க்கடலுள் மூழ்கிக் கண்ணீர் வடிக்கின்ற குடும்பங்கள் மிகவே கண்டோம். பிணியுழந்து மகவொன்று ஒருபால் வீழும்; பெரியமகன் கல்விக்குப் பொருளை வேண்டும்; மணியணிந்த எதிர்வீட்டுச் செல்வப் பிள்ளை வைத்திருக்கும் தின்பண்டம், பட்டுச் சட்டைத் |