142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
துணிவிழைந்தே அடம்பிடிக்கும் மற்றி ரண்டு; தொடுகறிகள் பற்றவிலை என்று கூறி அணிவகுத்து நின்றிருக்கும் மூன்று பிள்ளை; அத்தனைக்கும் என்செய்வான் பெற்ற தந்தை? ‘பூப்படைந்த பெண்ணிரண்டை வீட்டில் இன்னும் பூட்டிவைப்ப தெத்தனைநாள்? கையில் காதில் காப்பணிகள் ஒன்றில்லை, துணிகள் இல்லை, கவலையிலா திருக்கின்றீர்’என்று கேட்டு நாப்பணிய மொழிந்திருப்பாள் மனைவி நல்லாள் நாளெல்லாம் இதைநினைந்தே மெலிந்த மெய்யாள் சாப்பிடவும் மனமின்றித் துயிலு மின்றித் தவிப்பதற்கே பிள்ளைகளைப் பெற்று விட்டான்; வருவாயோ மிகக்குறைவு மக்கட் செல்வ வளர்ச்சிக்கோ குறைவில்லை; தீராத் துன்பம் உருவாகக் கொண்டவன்முன் வீட்டுக் காரன் ஓரைந்து மாதமென்றான் வாட கைக்கு; கருவான மாதத்தை எண்ணிக் கொண்ட கருங்குழலாள் தன்வயிற்றைத் தடவிக் கொண்டாள் உறுவாழ்வு துன்புறவோ பெற்றாள்? அந்தோ! ஒன்றிரண்டு பெற்றறிருந்தால் துன்பம் ஏது? |