20 புது விதி செய்வோம் ஒருவனுக்கோர் மனைவியெனச் சட்டஞ் செய்தால் ஊரிலுளார் அனைவருமே ஏற்க வேண்டும் ஒருமதத்தை மட்டுமது கட்டு றுத்தும் ஒருமதத்தைக் கட்டுறுத்த இயலா தென்றால் அரசெடுத்த திட்டத்தாற் பயனே யில்லை; அனைவர்க்கும் பொதுவான சட்டம் வேண்டும் கருவிதைத்த பெருக்கத்தைத் தடுக்க வேண்டின் கண்ணோட்டங் காட்டாமல் நடத்தல் வேண்டும், மடம்விட்டு நாண்விட்டுத் துணியும் விட்டு வருமானங் காட்டிவருந் திரைப்ப டங்கள், உடம்பொட்டி இதழொட்டிக் கன்னம் ஒட்டி ஒடிந்துவிழும் இடைபற்றிக் கைகள் பற்றி இடம்விட்டுப் போகாமல் ஒட்டிக் காட்டும் இழிவுதருஞ் சுவரொட்டி இவற்றைக் காண்பார் தடங்கெட்டுப் போகாமல் என்ன செய்வர்? தவிதவிக்கும் முக்கோணச் சின்னம் அங்கே. மணஞ்செய்ய மகளிர்தமக் கிருபத் தைந்து வயதாக வேண்டுமென வகுக்க வேண்டும்; பணஞ்செய்யுந் திரைப்படத்தார் சமுதா யத்தைப் பாழ்படுத்துங் கெடுகாமக் காட்சி காட்டா |