பக்கம் எண் :

144கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

வணஞ்செய்ய விதிவகுக்க வேண்டும்; காமம்
      வழிகின்ற கிண்ணங்கள் போன்ற தாள்கள்
குணங்கொய்யப் பெருகுவதைத் தடுத்தல் வேண்டும்;
      குடும்பநலத் திட்டங்கள் வெற்றி யாகும்.

மடமையினைத் தகர்த்தெறிந்து நாட்டு மக்கள்
      வளமாக வாழ்வதற்குப் பெரியார் சொன்ன
திடமருவுங் கொள்கைகளை மனத்திற் கொண்டு
      தெளிந்துணர்ந்து நடைமுறையில் போற்றல் வேண்டும்
கடமையொடு கண்ணியமுங் கட்டுப் பாடும்
      காத்துவருங் குடும்பங்கள் தோன்றச் செய்வோம்
கொடுமைக்கே ஆளாகிப் பாழா காமல்
      குடும்பநலங் காப்பதனால் நாடுங் காப்போம்.