21 விடிவு தோன்றும் நேர்கோட்டில் நடந்துசெலத் தயங்கு கின்றான் நெறிவிலகி நடப்பதையே விரும்பு கின்றான் பார்போற்ற வகுத்தமைத்த அகன்ற பாதை பார்த்தபினும் சந்தினையே தேடு கின்றான் சீர்காட்டும் தெருவிளக்கு நிற்கக் கண்டும் தெளிவின்றி இருட்டுக்குள் உலவு கின்றான் யார்தூற்றிப் பழித்தாலும் அவனுக் கென்ன? எப்படியோ குறுக்குவழி ஒன்றே கண்டான். நல்வழிகள் பலவிருந்தும் அவற்றை விட்டு நடுத்தெருவில் விலங்குகள்போல் திரிய லுற்றான் அவ்வழியில் செல்வதையே தேர்ந்து கொண்டான்; அதற்குரிய காரணமென்? வீடு தோறும் நெல்விளையும் கழனிகள்போல் விளைந்து நிற்க நெருக்கடியை ஆக்கிவிட்டான்; அதனால் மாந்தன் புல்வழிகள் மேற்கொண்டான் செம்முக் கோணம் புகட்டுகிற நெறிநடந்தால் விடிவு தோன்றும். |