கடல்சுமந்தாள் மலைசுமந்தாள் கான்சு மந்தாள் கால்நடைகள் பலசுமந்தாள் மாந்தர் என்ற உடல்சுமந்தாள் வயல்சுமந்தாள் நதிசு மந்தாள் ஊர்சுமந்தாள் நகர்சுமந்தாள் செடிசு மந்தாள் குடல்சுமந்து பெற்றெடுத்த அன்னை யில்லாக் குலப்பிள்ளை போலாகி நின்றாள் அந்தோ! மிடல்சுமந்த அவளுருத்துச் சினந்து நின்றால் மேலாளர் வாழ்வெங்கே அவளே வெல்வாள். - ஈரோடு |