பக்கம் எண் :

16கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

4
அச்சு முறிந்தால்...

சாதியின் பேரைச் சொல்லிச்
      சார்ந்திடுங் கட்சி சொல்லி
ஓதிடுங் கல்வி கற்போர்
      உறுபகை கொண்டோ ராகி
மோதினர் என்ப தாலே
      மூடினர் கல்விக் கூடம்;
காதிலிச் செய்தி வந்து
      கனலெனப் பாய்ந்த தம்மா!

கற்கவோ வந்தீர்? அன்றிக்
      கலவரஞ் செய்து வீதி
நிற்கவோ வந்தீர்? நாளை
      நிகழ்ந்திடும் நன்மை யாவும்
விற்கவோ வந்தீர்? நீவிர்
      விளைத்திடும் தீமை சொல்லச்
சொற்களே இல்லை இல்லை
      துடிக்கிறேன் நெஞ்சம் நொந்து.

கற்றிட அரசு நல்கும்
      காசெலாம் பாழே யாக்கிப்
பெற்றவர் பட்ட பாட்டைப்
      பேணிய கனவை யெல்லாம்