பக்கம் எண் :

164கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

காலளவு தொங்குகிற தங்க மாலை
      கழுத்தணிந்து மெய்யடியார் போல்ந டிக்கும்
போலிகளை நம்பாதீர்! கண்ணை மூடிப்
      புலம்பாதீர்! விழிதிறந்தே உலகைக் காண்பீர்!

கையகத்தே பழமிருக்கக் கிளையில் தொங்கும்
      கனிதனக்கே வாய்திறந்து நிற்றல் நன்றோ?
வையகத்தை நம்பாமல் பக்தி என்று
      வானத்தை நோக்குவதால் என்ன கண்டோம்;
*மையகத்தில் படராமல் தூய்மை செய்து,
      வாழ்ந்துவரும் தாயகத்தின் பக்தி பூண்டு
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி
      வானுலகை இவ்வுலகில் படைப்போம் வாரீர்!

(வானொலியில் இப்பாடலைக் கேட்ட பக்தர்கள் கண்டனக் கடிதங்கள் கணக்கின்றி எழுதினர்)

- திருச்சி வானொலி நிலையம்
14.4.1970


மை அகத்தில் படராமல் - மனத்தில் மாசுகள் படராமல்