27 இன்றைய மனிதன் பூவுலகங் கண்மலரப் பொங்குங் களிசிறக்கப் *பாவுங் கதிர்பரப்பிப் பைய வருங்கதிரோன் நட்ட நடுவானில் நண்ணிவெயில் விட்டெரிக்கும் பட்டப் பகலில் பலபேர் நடமாடும் வெட்ட வெளியில் விரிந்த நடுத்தெருவில் **முட்ட நரைத்த முதுமைப் பெருங்கிழவர் தாங்கும் இடக்கையில் தண்டூன்றித் தந்தலைமேல் ஓங்கும் வலக்கையில் ஓர்விளக்கை ஏந்திநின்று முன்னே வருவோர் முகமெல்லாம் பார்த்தலுத்துப் பின்னேயுந் தேடிஅவர் பேதலித்து நின்றிருந்தார்; ஆண்டு வருவோர்தாம் அக்கிழவர் பாலணுகி ‘ஈண்டெதனைத் தேடி இளைத்தீரோ’ என்றார்க்குத் ‘தேடுகிறேன் மாந்தனைத்தான் தேடி அலைந்தலைந்து வாடுகிறேன்’ என்றுரைத்தார்; ‘வெய்ய பகல்தனிலோ கையில் விளக்கெடுத்துக் காணப் புறப்பட்டீர்? வெய்யில் கொடுமை விளைத்த புதுமையிதோ? ஒன்றும் புரியவில்லை உம்செயலே விந்தையதாம்’ என்று பலசொல்லி எள்ளி நகைத்தார்கள்; ‘எள்ளி நகைப்போரே இவ்வண்ணந் தேடினுமே
*பாவும் கதிர் - பரவிய ஒளியை, **முட்ட - நிறைய |