பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

பண்ணா தனவெல்லாம் பண்ணி மகிழ்கின்றோம்;
வாழ்வின் நலமெல்லாம் வாய்க்க முயன்றிடுவோம்
தாழ்வு வருமேல் தரியோம் அதுமுறைதான்;
ஆயினுமவ் வாழ்க்கை அயலவர்க்கும் வேண்டுமன்றோ?
தீயனவே செய்ததனைத் தீய்த்துக் கரியாக்கி
மாய்ப்பதுதான் நல்லதொரு வாழ்வாமோ?அன்னவரை
ஏய்த்துப் பிழைப்பதுதான் ஈங்கினிய வாழ்வாமோ?
மாண்புயர்ந்த காதல் மலரைவிட மெல்லிதெனக்
காண்பதுதான் நம்முன்னோர் கண்டுரைத்த நல்வழியாம்;
இல்லறத்து வாழ்வில் ஒருவன் ஒருத்திஎன்ற
நல்லறத்தைச் சொல்லி நடந்தவரும் நம்முன்னோர்;
நாகரிகப் பேரால் நலமறியாப் பாழுக்கு
வேகமுடன் ஏகுகிறோம்; வீணை நரம்பதனை
மெல்ல வருடாமல் வேல்கொண்டு சாடுகிறோம்;
நல்லதொரு பூவை நசுக்கிக் கசக்கிவிட்டுச்
சொல்லரிய தேன்சுவைக்கச் சூழுகிறோம் அந்தந்தோ!
இல்லறத்தில் வாழும் இருவர் பெறுமின்பம்
ஈங்குத் தனியுடைமை; இவ்வரிய செம்மைநெறி
நீங்கிப் பொதுவுடைமை யாக்க நினைக்கின்றோம்
இன்பம் பெறவே இழிசெயல்கள் அத்துணையும்
வன்பிற் புரிந்திங்கு வாழ்கின்றோம்; நாம்மனிதர்!
நட்பைப்போல் நற்பண்பு நானிலத்துக் கண்டதிலை
அப்பப்பா அவ்விடத்தும் ஆற்றுகிறோம் வஞ்சகங்கள்;
நம்மைத் தெளிந்திருக்கும் நண்பர்க்குந் தீமைசெயல்
செம்மை நெறிஎன்றே செய்து வருகின்றோம்;
எள்ளுங் கயமை எவையுளவோ அவ்வெல்லாம்
உள்ளம் உவந்தே உயர்வாக ஆற்றும்நமை
மக்களே போல்வரென வைத்திருக்கும் இவ்வுலகம்