170 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
28 வெம்புவான் கம்பன் கலிவெண்பா செந்நெல்லும் பைங்கரும்புஞ் சேர்த்து விளைவித்துப் பொன்கொழிக்கச் செய்தமையாற் பொன்னியெனும் பேர்கொண்டாள்; காணும் இடமெல்லாங் காவிரித்துச் செல்லுதலால் பேணுமொரு காவிரியாம் பேர்பூண்டாள்; நாளெல்லாம் வற்றா வளஞ்சுரந்து வாழ்வளித்துக் காப்பதிலே பெற்றாள் எனவுரைக்கப் பெற்றாளவ் வாரணங்(கு) உச்சி முடியிருந் தோடிவருங் கங்கையினும் மெச்சும் புனிதத்தால் மேம்பாடு கொண்டவளின் *கால்பட்ட மண்ணெல்லாம் **கஞ்சமுறு செல்வமகள் கால்பட்டுப் பூத்துக் களிநடனஞ் செய்ந்நாடு சால்பட்ட செய்யெல்லாஞ் ***சாலி தலைசாய்த்து வேல்தொட்ட கண்மடவார் வெட்குதல்போற் காட்சிதரும் வந்தார் பசிநீக்கி வாட்டந் தவிர்க்கின்ற நந்தா வளநாடு நன்செய்ப் பெருநாடு; நாற்று வளத்தாலே நானிலம் போற்றும்வணம் சோற்று வளம்படைத்த சோணாட்டுப் பேரூரில் பாட்டரசன் தான்பிறந்தான் பன்னும் புகழ்ச்சோழ
கால்பட்ட - வாய்க்கால் சென்ற, ** கஞ்சம் - தாமரை, ***சாலி -நெற்பயிர் |