18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
படிப்பதற் கேற்ற நல்ல பருவத்தைப் பாழிற் போக விடுத்திடின் அதுதான் நாளை மீளுமோ? விளையும் நேரம் கடித்திடும் விட்டில் வீழ்ந்தால் களஞ்சியம் நிரம்பு மோஎன் றடிக்கடி எண்ணு வீரேல் அடையலாம் நலங்கள் யாவும். அடிக்கடி ஆசான் சொன்னால் அடிமையா நாங்கள் என்பீர் படித்திடப் பெற்றோர் கூறின் அதற்கும்நீர் படிவ தில்லை தடுத்திடும் சான்றோர் சொல்லை எள்ளியே தள்ளு கின்றீர் அடுக்குமா இந்தப் போக்கு வாழ்வையே அழிக்கு மன்றோ? |