பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே19

5
வகுப்பறையும் மாணவரும்

“வகுப்பறையா? கொலைக்களமா? இல்லை யில்லை;
      வாய்ப்பூட்டுச் சட்டங்கள் உலவும் மன்றம்;
நகைத்துவிளை யாடுகிற சுதந்தி ரத்தை
      நசுக்குகிற உலைக்கூடம்; உரிமை யாவும்
தகர்க்கின்ற சம்மட்டி வைக்குங் கொட்டில்;
      தடையின்றிப் பறக்கின்ற உணர்வை எல்லாம்
தகைக்கின்ற கிளிக்கூடு; கதவும் பூட்டும்
      தாங்காத சிறைச்சாலை; அடிமைச் சாலை.”

‘உயர்கல்வி பயில்கின்ற சாலை என்பார்
      உணர்ச்சிகளைப் பிழிந்தெடுக்கும் ஆலை யாகும்;
அயர்வகல நிழல்நல்கும் சோலை என்பார்
      அயர்வுடனே வெம்மைதரும் சாலை யாகும்;
துயரகலும் கலைபயின்றால் என்பர் தேர்வுத்
      தொல்லைகளாற் கலங்கவைப்பர்; கல்லூரிக்குப்
பெயர்வரவே எம்மைஎலாம் கட்டுப் பாட்டின்
      பேர்சொல்லி அடிமைஎன அடைத்து வைப்பர்.’

“எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பார்
      எமைமட்டும் அடிமைகளின் சின்னம் என்பார்;
கல்லாரும் மயங்குமிசைத் தட்டுப் பாட்டைக்
      காதுகளில் பாயவிடும் நேரம் பார்த்துச்