பக்கம் எண் :

186கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

என்னோற்றோம் இதுகாண? தாழ்ந்த கூந்தல்
      எப்படியோ உயர்ந்ததம்மா; கொண்டை என்று
பன்னூற்று வகைகளிலே பாழ்ப டுத்திப்
      பாவையரே அழகெல்லாஞ் சிரிக்கச் செய்தீர்!

கானத்தும் குகையிடத்தும் வாழ்ந்த நாளைக்
      காட்டுகிறார் முன்னேறிச் செல்லும் நல்லார்;
மானத்தைக் காக்கின்ற ஆடை தன்னில்
      மதியுடையார் சிக்கனத்தை விழையார் அம்மா;
மேனிக்கும் மனத்துக்கும் மென்மை வேண்டும்
      மேலாடை ஒன்றுக்கும் மென்மை வேண்டா!
மானுக்கு நிகராக வாழ்தல் ஒன்றே
      மாதர்க்கு நற்பெருமை யாகும் அம்மா!

திரு.வி.க. நினைவு நாள் - தஞ்சை
9.1.1966