188 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
புடைபடு புறத்துப் பொருள்களை மறைத்து, நேர்படக் காணா நிலையினைத் தந்து சீர்கெடச் செய்யும்; செய்திடுங் காலை இருளினை ஓட்டிப் பொருளினை விளக்கி இருவிழி களிக்க வருமொளி ஒன்று; மட்புலன் விளக்கி மயக்கந் தவிர்க்குங் கட்புலன் காணுங் கதிர்விளக் கஃதாம்; அகமெனு முலகில் அறியாப் பேரிருள் புகுதலின் நல்லன புரியா தொளித்து, நேர்படக் காணா நிலையினைத் தந்து சீர்கெடச் செய்யும்; செய்திடுங் காலை மருளினை ஓட்டி மாண்பினை விளக்கித் திருவுளங் களிக்க வருமொளி ஒன்றாம்: வருமொளி அதுதான் வளரறி வாகும் உட்புலன் விளக்கி உள்ளிடர் தவிர்க்கும் மெய்ப்புல மாகிய விளக்கிஃ தாகும்; புறவிளக் கெனவும் அகவிளக் கெனவும் இருவகைத் தாகும் இயம்பிய விளக்கு; விண்ணில் தோன்றி விழிக்கொளி நல்கி மண்ணிற் படுபொருள் கண்ணிற் படும்வணம் அரைநாள் விளக்கி வரையறை செய்யும் குறையுடைத் தாகும் கூர்கதிர் விளக்கே; அகத்தினில் தோன்றும் அறிவெனும் விளக்கோ மனத்தொளி நல்கும் மாண்பொருள் விளக்கும்; வரையறை யின்றி வாழ்நாள் எல்லாம் புரையற ஒளியினைப் போற்றி நல்கிடும்; *தண்மதி யென்னும் ஒண்கதிர் விளக்கும்
* தண்மதி - குளிர்நிலா |