நண்ணும் முழுமை நலியும் தேயும்; *உண்மதி யென்னும் ஒளிவிளக் கிதன்பால் நண்ணும் முழுமை நலிதலும் இல்லை தேய்தலும் மாய்தலும் சிறிதும் இல்லை; வாழும் நாளில் வழிவழி சிறந்து நாளும் வளரும் நந்தா விளக்கு; தெய்விளக் காயினும் எவ்விளக் காயினும் பெய்ம்மழை தன்னால் பெருவளி மின்னால் குறைந்தும் அணைந்தும் மறைந்திங் கொழிவன; அகல்விளக் காயினும் அகல்விளக் காகும்; பெரும்புய லாயினும் பேரிடி யாயினும் வரும்பொழு திங்கே உறுதுய ரில்லா அணையா விளக்கே அறிவெனும் விளக்கு குறையா விளக்கே குலவுமெய் விளக்கு நினைத்தெழும் அறிவெனும் நேரிய விளக்கே அனைத்துல கெங்கும் அகல்விளக் காகும்; பொய்விளக் காகிய புறவிளக் கதனினும் மெய்விளக் காகிய அகவிளக் கொன்றே தலைவிளக் காகும்;தக்கோர் விழையும் நிலைவிளக் காகும் நினைவினிற் கொள்க; கைவிளக் கில்லான் காரிருள் நெறியிற் செய்வதொன் றறியான், செல்வழி தெரியான் எதிர்வரும் உருவினை இன்னதென் றுணரான், மிதிபடுங் கயிற்றினை மேவிய அரவெனக் குதிபடத் தாவிக் கோவென் றலறுவான், எஞ்சிய சிறுமரம் எதிரிற் றோன்றிடின் அஞ்சியும் நடுங்கியும் ஐயஒ பேயென்
* உண்மதி - அறிவு |