பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்209

8
தொடர்வோம் தொண்டு

மூவாத் தமிழுணர் மு.வ. தமக்குச்
சாவா? அச்சொலைச் சற்றும் நம்பிலோம்;
விடிந்தது பொழுது தொடர்ந்தது செய்தி;
படர்ந்தது துயரம்; நடந்தது கொடுமை!
சரியா மனத்தர் சரிந்தனர் எனுஞ்சொல்
சரியா? பிழைபிழை; சாவே பிழைபல
புரியா நின்றனை புரியா மதியால்;
பெரியார் அறிஞர் பெரும்புல வோர்கள்
எவரே யாகினும் எழும்நின் பசிக்குத்
தவறார் கொல்லோ தடுப்பே இலையோ?
ஆம்ஆம் இயற்கையின் ஆற்றலை அறிவோம்;
அறிவோம் ஆகினும் ஆற்றாத் துயரால்
சிறிதே மறந்தனம் சிந்தையும் மயங்கினம்
உயிர்தான் பிரிந்தது; உடல்தான் மறைந்தது;
செயலும் செயலால் செழித்தநற் றமிழும்
உண்டிவன் அன்றோ? ஒண்மையர் அவர்தம்
தொண்டினை இன்னே தொடருதும் யாமே.