212 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
10 மணிவிழா வாழ்த்து சுவைபழுத்த செந்தமிழின் சோலை புக்குச் சோர்வின்றி ஆர்வமுடன் வாழ்நாள் எல்லாம் நவைதவிர்த்த ஆய்வுரைகள் நல்கி வாழும் நலம்பழுத்த தமிழ்பழுத்த நல்லோய்! இந்த அவையகத்தில் புலம்பழுத்தோர் பலரும் வாழ்த்த அவர்குழுவில் எனையுமுடன் கூட்டு வித்தார் கவிதொடுத்து வாழ்த்துகின்றேன் அறுபான் ஆண்டு கண்டோய்! நின் புகழ்வாழ்க வாழ்க என்றே. பொருள்கருதிப் புகழ்கருதி எழுத்து வேந்தர் புல்லியமென் காகிதத்தால் வண்ணப் பூக்கள் இருள்பெருகப் படைத்துவரல் காணு கின்றோம்; இவைவிரும்பும் சுரும்பினமாய் மாந்தர் மொய்த்து மருள்பெருகிச் சுழலுகின்றார் அந்தோ! இந்நாள் வண்டமிழின் நலங்கருதி நுண்பு லத்தால் தெருளறிவு மணமலர்கள் நீப டைத்தாய்! திறங்கண்டு மனங்கொண்டு வாழ்த்து கின்றேன். ஒருதுறையில் எவரேனும் வெற்றி காணின் ஊரிலுளார் அனைவருமே அதனைச் செய்வர் பிறதுறையை நினைவுகொளார்; ஆனால் நீயோ பிறர்புகுதாத் தனித்துறையை வகுத்துக் கொண்டு |