பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்213

வருதுறையில் வெற்றியுடன் தமிழ் வளர்த்தாய்!
      வாகைகொளும் நினைவாழ்த்த வாய்ப்புப் பெற்றேன்
பெருமைமிகக் கொண்டுன்னை வாழ்த்து கின்றேன்
      பெரியோய்நின் திறம்வாழ்க வாழ்க என்றே.

பழகுதற்கு மிகஇனிய பண்பு கொண்டாய்!
      பலநூல்கள் யாத்திருக்கும் அறிவு சான்றும்
அழகுதரும் உயர்வுதரும் அடக்கம் கொண்டாய்!
      ஆய்ந்துணரும் ஆற்றலினை எடுத்துக் காட்டும்
விழியுடையாய்! எவரிடத்தும் வெறுப்புக் கொள்ளாய்!
      வேறுபடு கருத்துக்கும் மதிப்ப ளிப்பாய்!
எழிலுடையாய்! தமிழ்வாழ நின்னை வாழ்த்தி
      ஏத்துகிறேன் நலமுடன்நீ வாழ்க என்றே

ஆன்றமைந்த பண்பினிக்கும்; வஞ்சம் இன்றி
      அன்பளைந்து செப்புகின்ற சொல்லி னிக்கும்;
ஈன்றளித்த ஆய்வுரைசேர் நூல்கள் எல்லாம்
      இனித்திருக்கும்; துணையின்றித் தனித்தி ருந்து
சான்றாண்மை பெற்றோய்! நின் உழைப்பி னிக்கும்;
      சார்ந்துள்ள புகழினிக்கும்; செயலி னிக்கும்
தோன்றலுன்பால் அத்துணையும் இனிக்கக் கண்டோர்
      சீனிவேங் கடசாமி என்றார் போலும்!

மலர்தோறும் மலர்தோறும் சென்று வண்டு
      மணம்சுவைத்துத் தேன்சுவைத்துச் சேர்த்து வைக்கும்;
பலவாகும் சமயமெலாம் நீபு குந்து
      பைந்தமிழை நுழைபுலத்தாற் சேர்த்து வைத்தாய்;