218 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
12 தமிழ்க் கடல் பச்சைமா மலைமுகட்டில் ஆழ்வார் பெய்த பாடல்நா லாயிரமும் செந்தேன் ஆறு; மச்சவுரு மாலவனும் அயனும் அண்ணா மலைவாழும் சிவமலையில் மூவர் பெய்த மெச்சுமிசைத் தேவாரம் தீம்பா லாறு; மேலவர்வாழ் குன்றத்தூர்ப் பெருமான் பெய்த இச்சைமிகும் திருதொண்டர் பெருமை பேசும் எழில்மிகுந்த வரலாறும் ஒருபே ராறு. அவனடியைத் தொழுதுருகும் வாச கந்தான் அழுதழுது பொழிந்துவைத்த கண்ணீர் ஆறாம்; எவனடியால் உலகளந்தான் அவன்றன் காதை இயம்பும்நூல் உயிராறாம்; பயில்வார் நெஞ்சைக் கவருமுலா தூதுபிள்ளைத் தமிழோ டின்னும் கலம்பகங்கள் சிற்றாறாம்; இவ்வா றெல்லாம் தவறாது மனம்புகுந்து பொங்கி யோங்கும் தமிழ்க்கடலே நம்இராய சொக்க லிங்கம். 16.9.1973 |