220 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பேசான் பழிமொழி ஏசான் பிறரை நண்பன் பண்பன் நயத்தகு தமிழைக் கண்ணென் உயிரெனக் கருதும் இயல்பினன் கல்வியைத் தமிழிற் கற்கத் தடையெனில் அல்வினை யதுதான் அழிகவென் றெழுந்து வல்வில் லம்பெனச் சொல்லமர் தொடுத்தவன் அமர்க்களம் சென்றவன் ஆங்கே மாண்டனன் எமக்கெலாம் துயரே தந்தனன் ஐயஓ! யாவன் அவனென வினவின் தீவினை செய்யாச் செம்மல் செந்தமிழ்ப் பெம்மான் பொய்யா மாணிக்கப் புலவன் அவனே. 20.5.1989 (முனைவர் வ.சுப.மாணிக்கனார் மறைவு குறித்துப் பாடியது) |