மனிதரைக் கண்டு கொண்டேன் | 221 |
14 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா வஞ்சனை அறிய மாட்டான் வாய்மையில் நழுவ மாட்டான் பஞ்சினும் மென்மை நெஞ்சன் பழகிட இனிய நண்பன் அஞ்சிடும் தீமை காணின் அவ்விடம் விலகி நிற்பான் பிஞ்சிளங் குழந்தை காணின் பேணுவான் தெய்வ மென்றே. ஆர்ப்பரிப் பொன்று மில்லான் அடக்கமே என்றுங் கொள்வான் சேர்த்திடும் நண்ப ரெல்லாம் சிறுவர்தம் வாழ்வில் அன்பு வார்த்திட வழிகள் சொல்லி வளர்த்திடும் நாட்டங் கொண்டான் கூர்த்தநல் மதியில் நெஞ்சில் குழந்தைகள் நினைவே கொள்வான் சென்றிடும் இடத்தில் எல்லாம் சிறுவர்க்குச் சங்கம் காண்பான்; நன்றறி சிறுவர் சூழ நடுவினில் அமர்ந்து பேசி |