மனிதரைக் கண்டு கொண்டேன் | 223 |
15 பதிப்புச் செம்மல் கற்கும் நாள்முதல் கனிவும் பணிவும் பற்பல பண்பும் பதிந்த நெஞ்சினன் மேலோர் தொடர்பு மேலெனக் கொண்டவன் நூலோர் போற்றும் நுண்மதி பூண்டவன் பல்கலைக் கழகத்தில் பயிலுங் காலை நல்லவர் பலரொடு நட்புப் பூண்டோன் அரும்பெறல் நூல்கள் அழகுறப் பதித்துப் பெருந்திறல் காட்டிப் பெயர்சொல உழைத்தோன் பதிப்புச் செம்மல் என்று பலரும் மதித்துப் போற்றும் மாண்பமை நண்பன் எழுத்தும் பேச்சும் இனிக்க, செயல்கள் வழுத்தும் படியா வாய்க்கும் இயல்பன் மெய்யப்பன் என்னும் மேலோன் வையை மணலினும் வாழினும் இனிதே. 26.7.1998 |