224 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
16 உடன் பிறவாத் தமக்கை தனித்துப் பிறந்து தவிக்கும் என்னை இனித்த மொழியால் இனிய முகத்தால் உள்ளுறும் அன்பால் உடன்பிறப் பாக்கி அள்ளி யுதவி அரவணைத் தளிக்கும் பார்வதி தேவியைப் பணியும் புகழும் ஓர்தமிழ் உணர்ந்தஎன் உயர்சிறு நாவே. (1927இல் காந்தியாரைத் தம் இல்லத்தில் தங்க வைத்துத் தமிழகத் தென் மாவட்டங்களில் பேராயக் (காங்கிரசு) கட்சிப் பொதுக்கூட்டங்கள் நடத்தியவரும், நேதாசி சுபாசு சந்திர போசுடன் பழகி, அவரின் விடுதலைப் போராட்டத்திற்குத் தம் பெரும் பொருளைக் கொடுத்தவரும், பின்னாளில் தந்தை பெரியாரின் பேரன்பைப் பெற்றுச் சுயமரியாதை இயக்கத்தின் சென்னை மாநிலப் பொருளாளராக இருந்து சமுதாய சீர்திருத்தத்திற்குப் பெரும் தொண்டாற்றியவரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, கவிமணி தேசிக விநாயகம், பாரதியார், பாரதிதாசன், கவியரசு முடியரசனார், பொது உடைமை இயக்கத் தலைவர் ப.சீவானந்தம் மற்றும் பல தலைவர்களைப் போற்றிப் புரந்த வள்ளலுமான சீர்திருத்தச் செம்மல் கானாடுகாத்தான் வை.சு.சண்முகனாரின் திருமகள் திருமதி ந.பார்வதி தேவியைப் பாடியது.) |