மனிதரைக் கண்டு கொண்டேன் | 227 |
18 பொற்கிழி பெற்றவன் (“மானின் நேர்வழி மாத ராய்வழு திக்கு மாபெரும் தேவி கேள்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பண்ணில் பாடவும்) சேரன் நல்லினங் கோவின் நூலினைச் சிந்தை மேவிய ஆசையால் ஓரும் நுண்புலம் கொண்டு தேர்ந்ததை ஓதி உண்மகிழ் வுற்றவன் யாரு மேமணம் சேரும் நட்பினை ஆக்கும் புன்னகை கொள்முகன் ஊரும் வாழ்த்திட நாடும் ஏத்திட ஓங்கு பாமொழி வாயினன். சோலை நாண்மலர்த் தூய தேனினைச் சூழும் யாழிசைத் தும்பிபோல் காலை யானதும் ஓய்வி லாதெழு கடமை யாற்றிடும் வாழ்வினன் ஆல வாயெனும் மதுரை மாநகர் ஆல யத்தவர் சாற்றிய சால வல்லவர் பாடும் போட்டியில் சார்ந்து பொற்கிழி பெற்றவன் |