228 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நாம நீர்க்கடல் லாவியே நாடி நல்லன கண்டவை நாமும் கற்றிட ஆசை யுற்றவன் நல்ல நூல்களைத் தந்தவன் பூமி யாள்பவர் தேரும் நூலினால் பொன்கள் ஆயிரம் பெற்றவன் சோம சுந்தர நாமம் மேவிய தோழ னாமவன் வாழ்கவே. (கவிஞர் அருசோ அவர்கள் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மூன்று நாள் ஆற்றில் ‘சிலப்பதிகாரம் ஒரு புதிய பார்வை’ தொடர் சொற்பொழிவினைக் கேட்டு 10.8.1981 அன்று வழங்கிய வாழ்த்து) |