மனிதரைக் கண்டு கொண்டேன் | 229 |
19 வணிக நோக்கறியான் பயிலும்நாள் தொடங்கி என்பாற் பழகிடும் நண்பன்; அன்பு செயலிலே குறைவு காணேன்; அன்றுபோற் செழுமை கண்டேன், மயலுறும் செருக்கே யில்லா மதிமிகு புலமை கண்டேன்; அயலென எண்ணா தென்னை அவனுடன் பிறப்பென் றெண்ணும். உளத்திலே ஒன்றை வைத்தும் உதட்டில்மற் றொன்றை வைத்தும் கிளத்துதல் அறியா வாயன்; கெடுதலை நினையா நெஞ்சன் களைப்புறும் பொழுதில் மற்றோர் கனிவுடன் செய்த நன்றி உளத்தினிற் பதிய வைத்தே உணர்ந்துணர்ந் துருகும் மேலோன். பிணிபல சூழ்ந்த போதும் பிறக்கிடல் அவனுக் கில்லை துணிவுடன் எதிர்த்து நின்றே துயர்களை மறந்து நிற்பான் பணிவுடன் இன்சொற் பேசிப் |