230 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
பழகிடும் பழநி வேலன் அணிமிகும் தூய நெஞ்சில் அன்புடன் பண்புங் கொண்டான். கற்றவை நினைவிற் கொண்டான் காட்டிய நெறியிற் செல்வான் உற்றதை மறைத்தல் செய்யான் உதவியே உவகை கொள்வான் பெற்றதே போதும் என்பான் பெருகிய ஆசை இல்லான் நற்றவ முனிவன் போல நாளெல்லாம் தனிமை கொண்டான். பணிபுரி நாளில் வந்து பழநிவே லவனை நாடி அணுகிநல் லுதவி பெற்றோர் அளவிலர்; பழகும் நட்பில் வணிகநோக் கறியா தென்றும் வாழ்க்கையின் பயனாக் கொண்டான் அணிதிகழ் ஒழுக்கத் தானை அன்புடன் வாழ்த்து கின்றேன். (உடன்பயின்ற நண்பர் மு.பழநிவேல் அவர்களைப் பற்றிப் பாடிய பாடல்) |