பக்கம் எண் :

232கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

21
பழனி தந்த பாட்டு

பாட்டென்றபேரால்பழுதுபட்டசொற்றொடரைக்
கேட்டென்றன்நெஞ்சங்கிறுகிறுத்தேன் - வேட்டெழுந்து
நாடகமாம்நன்மருந்தைநண்பன்பழநியெனும்
பாடல்வலான் தந்தான் படைத்து.

தேன்கலந்துதந்தனனோதெள்ளமுதந்தந்தனனோ
நான்கலந்தேஇன்புற்றேன்நாடோறும் - வான்பறந்தேன்
வாட்டுந்துயர்துறந்தேன்வையந்தனைமறந்தேன்
பாட்டைஅவன்படிக்கக் கேட்டு.

கூற்றமிலாவாழ்வுகொடுத்ததமிழ்த்தாயே
ஏற்றவரம்இம்மகற்கும்ஈந்தருள்வாய் - சாற்றுக்
கனிச்சுவையை விஞ்சுங்கவிமாலைநின்றன்
அனிச்சுவடிக்கீந்தான்அவன்.

(‘அனிச்சஅடி’ நாடகக் காப்பியத்தைப் படிக்கக் கேட்டுக் கனவிற் பாடியது)