மனிதரைக் கண்டு கொண்டேன் | 233 |
22 பாளைநகர்ப் பண்பாளன் சொல்லப்பழகியவன்சொல்லரியநண்புளத்தால் வெல்லப்பழகியவன்வீரனவன் - நல்லனவன் என்னுளத்தைத்தொட்டுணர்ந்தேஏற்றதுணைபுரியும் பொன்னுளத்தன்ஓர்வயிற்றோன்போல். உண்ணென்றுரைத்துரைத்தேஊட்டிஎனதுளத்தைத் தண்ணென்றியற்றுந்தகவுடையன் - பண்ணொன்றும் பாட்டெனவேஎன்பாற்பழகும்இயல்புடையன் கூட்டுணர்வால்விஞ்சுமனங்கொண்டு. வந்தோர்குறையகலவாழப்பரிந்துரைகள் தந்துபுகலளித்துத்தாங்குமிடம் - வந்தஎனைக் கேளாகஎண்ணிக்கிளர்ந்தெழுந்தஅன்புமணி வேளாளன்வாழ்கின்றவீடு. கொஞ்சும்மொழியுடையன்கூடாரும்வந்திவன்பால் தஞ்சம்எனஒருசொல்தந்துவிடின் - நெஞ்சுருகி அஞ்சல்நிலையத்தலுவல்புரிவதனால் அஞ்சலெனச்சொல்வான்அவன். கதிரடித்தநெல்லைக்களங்குவிக்கும்நெல்லைப் பதியடுத்தபாளைநகர்ப்பண்பன் - மதிபடைத்த வள்ளுவனார்சொற்றபடிவாழ்க்கைத் துணைநலந்தான் கொள்ளுவதால்கொண்டான்குணம்.
ஓர் வயிற்றோன் - சகோதரன், அஞ்சல் - அஞ்சாதீர் |