பக்கம் எண் :

252கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

பாளைநகர்க் கொட்டிலுக்குள் போவென் றாலும்
      பாராளக் கோட்டைக்குள் வாவென் றாலும்
பாளைநிகர் சிரிப்புடனே செல்கின் றாய்நீ
      பக்குவஞ்சேர் ஞானிஎன ஆகிவிட்டாய்;
காளைகளுக் குன்பெருமை தெரிய வில்லை
      கலைத்துறையின் திலகமுந்தான் அறிய வில்லை;
நாளைவர லாறுரைக்கும் நாய கன்நீ
      நான்புகழ்ச்சி சொல்லவில்லை உண்மை சொன்னேன்.

தருக்குடனே அதிகார போதை ஏறித்
      தனிக்குடையின் கீழிருந்தோர்கொண்டு வந்த
நெருக்கடியில் சிரித்தவன்நீ; நின்னைக் காண
      நிமிர்ந்தெழுந்த கூட்டத்தில் இடித்துத்தள்ளும்
நெருக்கடியில் சிரிப்பவன்நீ; உறுதி யோடு
      நிற்பவர்தம் திருமணங்கள் நடத்தி வைத்துப்
பொறுப்புடனே கழகத்தைக் காக்கப் பேச்சில்
      பொடிவைத்துச் சிரித்தெமையும் சிரிக்க வைத்தாய்.

திரையுலகில் பராசக்தி வந்த போதுன்
      திறமையெலாம் கண்டவர்கள் புகழ்ந்து நின்றார்;
அரசியலில் பராசக்தி வந்தபோதுன்
      ஆற்றலெலாம் கண்டவர்கள் வியந்து நின்றார்;
இருபெரிய பராசக்தி வலிமை எல்லாம்
      எழுத்தாலே வென்றவன் நீ; இனிமேல் யார்க்கும்
வருமுலகில் இராசக்தி உன்னை வெல்ல;
      வருபகைகள் நண்புகொள ஏங்கிநிற்கும்.

கம்பனொரு கதைசொன்னான்; இராமன் மேலே
      கண்வைத்தாள் சூர்ப்பணகை, குறும்பு செய்தாள்;
வம்புபல இழைத்திருந்தாள், இளையோன் கண்டு,
      வந்தவளை மூக்கறுத்தான்; அதனை நோக்கி