மனிதரைக் கண்டு கொண்டேன் | 255 |
27 தூற்றலுக்குத் துவளாதான் வென்றவனை வெங்களத்தில் நின்றவனை வேதனைகள் பலவும் ஏற்று நன்றெனவே சிரித்தவனை நாளெல்லாம் உழைத்தவனை நாட்டுக்காக என்றுளமே மகிழ்ந்தவனை என்மக்கள் அரியணையில் ஏற்றி வைத்தார் நன்றியினை அவர்க்குரைப்பேன் நற்றமிழால் வாழ்த்துரைப்பேன் நாடு வாழ எனதுதமிழ்த் திருநாடே எனையீன்ற தாய்நாடே இதற்கு முன்னர் நினதுமனம் புண்ணாக நின்றவர்கள் இன்றில்லை நீங்கி விட்டார்; முனமொருகால் ஆண்டவன்தான் முதலமைச்சாய் மீண்டுமிங்கு முனைந்து வந்தான் மனமகிழத் தலைநிமிர்வாய் மனப்புண்ணை ஆற்றிடுவான் மாதே வாழி. சுடுகணைகள் எத்தனைதான் சொரிந்தாலும் துவண்டுவிடான் துணிந்து நிற்பான் விடுமுறைகள் அவற்கில்லை வேளைதொறும் பணிபுரிவான் வெற்றி கொள்வான் |