10 திரைப்படமும் மாணவரும் பண்பாடே சீர்குலைந்து போன தென்றால் படத்துறைதான் முதற்களமாம்; அதை நினைந்தால் கண்பாடு கொள்வதற்கு மனமேயில்லை; கயமைகளின் விளைநிலந்தான் அந்தப் பூமி; நண்பாலே உரைக்கின்றேன் இற்றை நாளில் நடிகர்யார் மாணவர்யார் தெரியவில்லை; கண்போலக் காக்குமிளம் பருவந் தன்னைக் கயமைக்குள் கூத்தடிக்க விட்டு விட்டார். நாளெல்லாம் படித்தவைதாம் நினைவில் நில்லா நடிகையின்பேர் நீங்காது நினைவில் நிற்கும்; *கோளெல்லாஞ் சொல்கின்ற சாத கத்துக் குறிப்பெல்லாம் அகலாது நினைவில் நிற்கும்; தேளெல்லாம் கொட்டியது போலி ருக்கும் தேர்வெனிலோ படித்தவையும் மறந்தே போகும். தோளெல்லாம் பூரிக்கும் திரைப்ப டத்தில் தொங்கவிட்ட ‘ஏ’என்னும் எழுத்தைக் கண்டால் படிப்புக்கு மதிப்பளிக்கும் காலம் நல்ல பண்புக்கு மதிப்பளிக்குங் கால மாகும்; நடிப்புக்கு மதிப்பளிக்குங் காலம் இந்த நாட்டுக்கே தீங்கிழைக்குங் காலம்; தோகை
கோள்எல்லாம் - கிரகங்கள் |