பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நடிப்புக்கு விழைகின்ற காலம்; இங்கு
      நற்கலைகள் வளர்கின்ற காலம்; கோழித்
துடிப்புக்கு மயங்குகின்ற காலம் நாடு
      துறைமாறிப் போய்விட்ட காலம் ஆகும்.

சிறந்திருந்த காலந்தான் இறந்த காலம்;
      சீர்களெலாம் நெகிழ்காலம் நிகழுங் காலம்;
வறந்திங்குப் பண்பெல்லாங் காய்ந்து வாடி
      வருங்காலம் உதிர்காலம் ஆகா வண்ணம்
திறங்கொண்டு மாணவர்காள் எழுக; உங்கள்
      திருநாட்டை விழிதிறந்து காண்க; உள்ளம்
திறந்திங்குப் பேசுகின்றேன் எதிர்கா லத்துத்
      திருவிளக்கை ஏற்றுவது நுங்கள் கையே.