பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

12
ஓடம் பழுதானால்.........?

அறிவொளி பெருக்கிக் காட்டி
      அகவிருள் நீக்கும் ஆசான்
செறிதரும் இளைஞர் நெஞ்சிற்
      செம்மையைப் புகட்டும் ஆசான்
நெறிதனைச் சுட்டிக் காட்டி
      நேர்மையிற் செலுத்தும் ஆசான்
தெரிதரும் கடவுள் என்பேன்
      தெய்வம்வே றில்லை என்பேன்

நாட்டினை உயர்த்திக் காட்டும்
      நல்லதோர் பணியில் தம்மைக்
கூட்டினோர் தாமே இன்று
      குறுநெறி நடந்தார் என்று
கேட்டதும் துடித்தேன் இந்தக்
      கேட்டினை யாங்கு ரைப்பேன்;
மீட்டிட மேலே நிற்போர்
      படுகுழி வீழ்தல் நன்றோ?

வாழ்ந்திட வழிகள் காட்டும்
      வானுயர் பணியில் உள்ளீர்
வீழ்ந்திடக் குழிகள் காட்ட
      விழைவதோ? ஆணி வேரைப்