பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே33

போழ்ந்திடல் முறையோ? இந்தப்
      புன்மையில் இறங்கி நீவிர்
ஆழ்ந்திட நினைந்த தேனோ?
      ஐயவோ கொடுமை யன்றோ.

உருவமும் உடையும் உங்கள்
      உயர்வினைக் காட்ட வில்லை;
பருவமும் பழகும் பாங்கும்
      படிப்பினைக் காட்ட வில்லை;
ஒருவனும் குறைகள் சொல்லா
      தொழுகுக இனிமே லேனும்;
கருவறை பழுது பட்டாற்
      கையினிற் குழந்தை ஏது?

பாடங்கள் புகட்டும் பாங்கைப்
      பையவே மறந்து போனீர்
கூடங்கள் திறவா வண்ணங்
      கூடிநீர் தூண்டி விட்டால்
ஏடுங்கள் கையிற் கொண்டும்
      என்னதான் பயனோ சொல்வீர்
ஓடங்கள் ஓட்டை யானால்
      ஒல்லுமோ கரையைக் காண?