34 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
13 புலவர் குறிக்கோள் புலவரெனும் மொழிசெவியிற் புகுந்திடுமேல் உள்ளமெலாம் பூரிப் பேன்நான்; அலகில்புகழ் மன்னரையும் அவரெதிரில் இடித்துரைக்கும் அஞ்சா நெஞ்சர் குலவிவரும் வறுமையிலும் கூடிவரும் பெருமிதத்திற் குன்றாச் செல்வர் உலகுறினும் பழிபுரியார் உயிர்செலினும் நிலைகுலையார் உயர்ந்தே நிற்பார் உலகினர்தாம் நெறிபிறழின் உளந்தரியா தறிவுறுத்தும் உரிமை யுள்ளார் பலர்விழையுஞ் செயலெனினும் பழியென்றால் தடுத்துரைக்கும் பண்பு கொண்டார் மலர்வருந்தா ததன்நறவை மகிழ்ந்துறிஞ்சி இசைபாடும் வண்டு போல்வார் நிலவுலகில் தம்வாழ்வை நினைந்தறியார் பிறர்நலமே நெஞ்சிற் கொள்வார். அத்தகைய பெயர்தாங்கும் ஆசான்மார் நிலைகாணின் அந்தோ நெஞ்சம் பித்தாகி மயலாகிப் பேதுற்றுச் சுழல்கின்றேன் பேசும் நாவிற்
*எத்தாலும் - எதனாலேனும். |